பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக காவல்துறைப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது, “மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும்.
இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை.
இதேநேரம், இன்று முதல் தனிமைப்படுத்தல் உத்தரவை மிகவும் கடுமையாக அமுலாக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே, அனைவரும் அதற்கமைய செயற்படுவார்கள் என நான் எதிர் பார்க்கின்றேன் என்றார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 354,109 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.
எனவே இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்காக பல சுகாதாரக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது. அதனடிப்படையில் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவித்தல் வெளியிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக காவல்துறைப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய அமைச்சரவை மறுசீரமைப்பின் போது முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.