மன்னாருக்கு புதிய தேர்தல் அதிகாரி நியமனம்

434 Views

IMG 20210816 095440 மன்னாருக்கு புதிய தேர்தல் அதிகாரி நியமனம்

மன்னார் மாவட்டத்திற்கு புதிய உதவித் தேர்தல் ஆணையாளராக திரு. விமலரூபன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக கடமையாற்றி வந்த திரு.ஜே.ஜெனிற்றன், வவுனியா மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் மன்னார் மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளராக திரு விமலரூபன் இன்றைய தினம் (16) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

வவுனியா கூழாங்குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், இதற்கு முன்பு கெபிடிகொலாவ பிரதேசத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியதோடு  கடந்த ஆறு வருடங்களாக இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றியும் வந்ததுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராக பொறுப்பேற்றிருந்த திரு.ஜே.ஜெனிற்றன், ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்ற தேர்தல்களில் மிகவும் சிறப்பாக கையாண்டு மூன்று வருடங்களுக்கு உரிய தேர்தல் இடாப்பு மீளாய்வுகளை செய்திருந்தார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply