ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து ஏற்படாது- தலிபான்

000 1IF31T 1 ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து ஏற்படாது- தலிபான்

தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து ஏற்படாது என தலிபான் இயக்கம் உறுதியளித்துள்ளது.

அதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அது  தெரிவித்துள்ளது.

கடந்த 2001 – மார்ச் மாதம் தலிபான்களால் ஆப்கானிஸ்தான் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த உலகின் மிக உயரமான புத்தர் சிலை அழிக்கப்பட்டது. இதனைக் கண்டித்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

இந்நிலையில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெய்லிமிறர் செய்தி நிறுவனத்திற்கு, தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தைகளில் முன்னிலை வகிப்பவருமான சுஹைல் ஷாஹீன் கருத்து தெரிவிக்கையில், “பௌத்த தளங்களுக்கு எங்களால் ஆபத்து ஏற்படாது.  தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது. இலங்கையின் விடுதலைக்காகப் போராடிய உங்கள் முன்னோர்களைப் போல் நாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திர விடுதலைப் போராளிகள். ஆனால் எங்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து விசமப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.  நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காகவும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடினோம்” என்றார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021