அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பேராசிரியர் G.L.பீரிஸ் வௌிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வௌிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்சக்தி அமைச்சு – காமினி லொக்குகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறைக்கு மேலதிகமாக, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அமைச்சராக நாமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் கோட்டாபய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.