ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கு அழிவில்தான் இருந்தது- சீனா

0b46776e f38a 40ea 8e9c e075fe5e98bb ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கு அழிவில்தான் இருந்தது- சீனா

‘ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் பங்கு தேசத்தின் கட்டுமானத்தில் இல்லை. அது அழிவில் தான் இருந்தது’ என சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பணி ஒரு போதும் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்புவதாக இருந்திருக்கக் கூடாது என்பது உண்மைதான் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பேசியதை மேற்கொள் காட்டி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆப்கானிஸ்தான் தலை நகரில் காணப்பட்ட காட்சிகள் குழப்பமானது, துக்ககரமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “பங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் நுழைந்த அமெரிக்கா போரைத் தொடங்கியது. ஆனால் இதில் வெற்றி பெற்றதா?

கடந்த 20 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பயங்கரவாதக் குழுக்களின் எண்ணிக்கை 20க்கும் அதிகமாகியுள்ளது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அல்லது காயப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஏதிலிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அமைதியை கொண்டு வந்ததா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021