மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு – மேலும் பல கொரோனா நிலவரங்கள்

IMG 1001 மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு – மேலும் பல கொரோனா நிலவரங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாத்  தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் கோரிக்கை களையடுத்து இன்று மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாத் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்ககைளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த கடையடைப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு ஆதரவு வழங்கி வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 321கொரனா தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளதுடன் 05மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மேலும் இது வரையில்  157கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளன.

இந்நிலையில், வுனியாவில் மேலும் 145 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனாத் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில், இன்று 145 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 192ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கடந்த 18 நாட்களில் 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தில் தற்போது வரையில் 1341 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-143-august-15-2021