மன்னார் மாவட்டத்திற்கு  மின்சார தகன நிலையம் அவசியம் – சுகாதார சேவையினர் கோரிக்கை

437 Views

DSC 5448 மன்னார் மாவட்டத்திற்கு  மின்சார தகன நிலையம் அவசியம் - சுகாதார சேவையினர் கோரிக்கைமன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வதற்கு மின்சார தகன நிலையம் அவசியம் என்று மன்னார் மாவட்ட செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,   சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா  தொற்றால்  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வவதால் இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு  வவுனியா அல்லது வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் உயிரிழந்த வர்களின் உறவுகளுகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே மன்னார் மாவட்டத்தில் தகன நிலையம் ஒன்றை அமைப்பது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக் காலத்தில் கொரோனா தொற்றினால் தொடர்ச்சியாக நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன இவ்வாறான நேரங்களில் இறந்தவரின் உறவுகளும் சுகாதார துறையினரும் பாரிய பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இறந்த உடல்களை வவுனியாவில் தகனம் செய்வது வழக்கம். யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா மாவட்டத்தில் இறப்பவர்கள் அனைவரையும் வவுனியாவில் தகனம் செய்வதால் மன்னாரிலிருந்து உடல்களை வவுனியா கொண்டு செல்வதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து செல்கின்ற இந்த சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் தகன நிலையம் ஒன்று உருவாக்கப்படும் போது அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் விடயமாக இது இருக்கும்.

இதுதொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு  கோரிக்கையை முன்வைத்து உள்ளதாகவும் மன்னார் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

DOCTOR மன்னார் மாவட்டத்திற்கு  மின்சார தகன நிலையம் அவசியம் - சுகாதார சேவையினர் கோரிக்கை

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  ரி.வினோதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மரணங்கள் தவிர்க்க முடியாததாகி வருகிறது மரணம் ஒன்று ஏற்படும்போது அதனை அதனை எரிப்பதற்கு புதைப்பதற்கு மன்னாரில் எந்த ஒரு வசதிகளும் இல்லை இதனால் உடலை எரிப்பதற்கு வவுனியாவிற்கு கொண்டு செல்வதற்காக உறவினர்களுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுவதோடு அதேவேளை சுகாதார பணியாளர்கள் தேவையில்லாமல் முழுநாளும் வவுனியாவிற்கு சென்று வருவதில் நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளது. இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமானால் உடனடியாக மன்னாரில் குருவினால் இறந்த உடல்களை அழிப்பதற்கான வசதியை மின் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி வினோதன்  தெரிவித்துள்ளார்.

MSDEO YATSAN மன்னார் மாவட்டத்திற்கு  மின்சார தகன நிலையம் அவசியம் - சுகாதார சேவையினர் கோரிக்கை

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணிப்போம் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த நேரத்தில் உயிரிழந்தவர்களை தகனம் செய்வதற்கு உடல்கள் வவுனியா கொண்டு செல்வதற்கு செலவுகள் அதிகமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே மன்னார் மாவட்டத்தில்  மின்னியல் தகன நிலையம் ஒன்று அமைப்பது காலத்தின் கட்டாயம். இது இன்றைய கொரோனா மரணத்திற்கு மட்டுமல்ல எதிர் காலத்திலும் இவ்வாறான ஒரு தகனமேடை மன்னார் மாவட்டத்திற்கு அத்தியா வசியமாக காணப்படும். ஏனெனில் இனி வரப்போகும் மழை காலங்களில் மரணிக்கும் உடல்களை எரி ஊட்டுவதற்கு பாரிய சிரமங்கள் ஏற்படும் போது இவ்வாறான மின் தகனமேடை பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் அத்தோடு இறந்த உடல்களுக்கு ஒரு கௌரவமாகவும் இருக்கும்.  இதேவேளை மன்னார் மாவட்டத்திற்கு தற்போதைய மிகவும் அவசியமாக உள்ள மின் தகனமேடை  அமைக்கும் பணியில் மத அமைப்புகள் தனவந்தர்களையும் இணைத்து செயற்படும் செயற்பட வேண்டும் என்று பொது மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply