தடையை மீறி X வடிவில் கைகளை உயர்த்திக் காட்டிய ஒலிம்பிக் வீராங்கனை?

165 Views

119695189 ravensaunders தடையை மீறி X வடிவில் கைகளை உயர்த்திக் காட்டிய ஒலிம்பிக் வீராங்கனை?டோக்யோ ஒலிம்பிக்கில் குண்டு எரிதல் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ், தான் வென்றெடுத்த வெள்ளிப் பதக்கத்தைப் பெறும் போது கைகளை எக்ஸ் (X) வடிவில் காட்டியுள்ளார்.

“ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் இடம்” என்பதைக் குறிப்பதற்காகவே எக்ஸ் வடிவில் தமது கைகளை உயர்த்திக் காண்பித்ததாக ரேவன் சாண்டர்ஸ் தமது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், பதக்கங்களைப் பெறுவதற்கான மேடையில் எந்த வகையிலும் போராட்டம் நடத்துவதையோ, குறியீடுகளைக் காண்பிப்பதையோ, முழக்கம் எழுப்புவதையோ சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதிப்பதில்லை. அப்படிச் செய்ய விரும்புவோர் தங்களுக்கான செய்தியாளர் சந்திப்பில் வாய்ப்பு உண்டு என டோக்யோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னதாக அறிவிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரேவன் சாண்டர்ஸின் செயல் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆய்வு செய்து வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறியுள்ளார். தண்டனை ஏதும் வழங்கப்பட்டால் அதை சாண்டர்ஸ் எதிர் கொண்டாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சாண்டர்ஸ், “தன்னுடைய சமூகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே பதக்க மேடையில் தாம் எக்ஸ் வடிசக் குறீயீட்டைக் காண்பித்தேன்.

பழைய தலைமுறையைக் காட்டிலும் புதிய தலைமுறையினர் வேறுபாடுகளை வெளிப்படையாக விவாதிக்கின்றனர்.  உலகம் முழுவதும் குரல் எழுப்புவதற்குத் தளம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதே தமது நோக்கம்.

நாங்கள் உண்மையில் எதற்காகவும் கவலைப் படவில்லை. எனது அனைத்து கருப்பின மக்களுக்காவும் குரல் எழுப்புங்கள். எனது எல்லா LGBTQ சமூகத்திற்குமாகக் குரல் எழுப்புங்கள். மனநல குறைபாடுகளைக் கொண்ட அனைவருக்குமாகக் குரல் எழுப்புங்கள். எங்களைப் பலர் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஏதாவது பேசுகிறோமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பல சமூகங்களைச் சார்திருக்கிறேன்” என்றார்.

25 வயதான ரேவன் சாண்டர்ஸ் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். ஓரினைச் சேர்க்கையாளர் என்பதை வெளிப் படையாக அறிவித்தவர். மனநலம் சார்ந்த பிரச்னை களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply