ஆப்கானில் உக்ரைன் விமானம் கடத்தல்  என்ற செய்தி உண்மையில்லை- உக்ரைன்

453 Views

120229246 gettyimages 1234841874  ஆப்கானில் உக்ரைன் விமானம் கடத்தல்  என்ற செய்தி உண்மையில்லை- உக்ரைன்

ஆப்கானிஸ்தானில் தமது நாட்டு குடிமக்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விமானம் ஈரானுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக உக்ரேன் வெளியுறவு துணை அமைச்சர் கூறியதாக இன்று சில ஊடகங்களில் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் இந்த தகவலை உக்ரேனின் வெளியுறவு அமைச்சகம் மறுத்திருக்கிறது.

இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒலே நிகோலேன்கோவை மேற்கோள் காட்டி உக்ரேனிய செய்தி முகமையான இன்டர்ஃபேக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “காபூலிலோ வேறு எங்கோ எங்கள் நாட்டு விமானம் கடத்தப்படவில்லை. இது தொடர்பாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை,” என்று கூறியுள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply