சீனா உருவாக்கிய முதல் பயணிகள் விமானம் -நேற்று முதல் சேவை ஆரம்பம்

சீனா சொந்தமாக உருவாக்கிய  பயணிகள் விமானம் நேற்றைய தினம் முதல் தனது  சேவையை ஆரம்பித்துள்ளது.

சீனா முதன் முறையாக உள்நாட்டிலேயே சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் உதவியுடன்  சி919 என்ற பெயரில் புதிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது.

ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 160 பயணிகள்  பயணிக்க முடியும்.

இதில் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகளை மேம்படுத்தும் முறை என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் காணப்படுகின்றன.

ஷாங்காயின் ஷாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 130 பயணிகளுடன், பீஜிங்கிற்கு விமானம் பயணித்துள்ளது.

இதற்காக, விமான நிறுவனத்திற்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பாராட்டும்  தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.