மகன், மருமகன், பேரனை தேடிய தாய் மரணம்- தொடரும் துயரம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவின் தாய் மரணம்
காணாமல் ஆக்கப்பட்ட உறவின் தாய் மரணம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை  தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று  மரணமடைந்துள்ளார்.

IMG 20220502 WA0032 மகன், மருமகன், பேரனை தேடிய தாய் மரணம்- தொடரும் துயரம்

வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த தங்கராசா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

IMG d3733ac0fe5dfb199fa8d16f4b0d188b V மகன், மருமகன், பேரனை தேடிய தாய் மரணம்- தொடரும் துயரம்

இவரது மகன்- தங்கராசா தயாபரன் (வயது 41) ,  மருமகன்- தம்பு தியாகராசா (வயது 56), பேரன்- தியாகராசா மனோகரன் (வயது 31) ஆகிய மூவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளத்தில் விறகுவெட்ட சென்ற போது இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

IMG 20220502 WA0026 மகன், மருமகன், பேரனை தேடிய தாய் மரணம்- தொடரும் துயரம்

இந்நிலையில் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வவுனியாவில் கடந்த 1898 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

IMG 20220502 WA0027 மகன், மருமகன், பேரனை தேடிய தாய் மரணம்- தொடரும் துயரம்

இந்நிலையில் மூவரையும் காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வவுனியா மாவட்டத்தில் இதுவரையில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 15 பேர் மரணமடைந்துள்ளதாகவும், வடக்கு கிழக்கில் 115 பேர் காலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamil News