இலங்கையில் பொருளாதார நெருக்கடி- விவசாயி ஒருவர் தற்கொலை

பொருளாதார நெருக்கடி- விவசாயி ஒருவர் தற்கொலை

பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாமல் 60 வயதுடைய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கல்கமுவ – வலஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறிய குடிசையில் மனைவியுடன் வசித்து வந்த அவர், சேனை விவசாயியாகவும், கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார்.

உயிரிழந்தவர் பெரியதொரு வயலில் விவசாயம் செய்து வந்ததாகவும், அதுவும் எண்ணெய், உரம் இல்லாததால் தோல்வியடைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த குடும்பத்தினர் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில் முறையான உணவைக் கூட பெற முடியாத அவல நிலையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 29ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை என்றும் பின்பு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உடல்  காணப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

Tamil News