யாழில் பரிதாபம் – சாமி அறையில் விளக்கேற்றிய மாணவி தீயில் கருகி உயிரிழப்பு

206 Views

விளக்கேற்றிய மாணவி தீயில் கருகி உயிரிழப்பு

இலங்கை, வடக்கு மாணாம், யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வீட்டில் உள்ள சாமி அறையில் விளக்கேற்றிய போது எதிர்பாராத விதமாக குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு தற்போதும் தொடர்ந்து வரும் நிலையில் பயன்பாட்டிற்காக வாங்கி வைத்திருந்த பெற்றோலை சாமி அறையில் வைத்திருந்தமையே இவ்விபரீதத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

விளக்கை எரியூட்டிய பின்னர் வீசிய தீக்குச்சி அங்கு வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கானின் மீது விழுதவுடன் தீப்பற்றியதில் மாணவி தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

Tamil News

Leave a Reply