அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் கோட்டாபயவுக்கு இல்லை-தாய்லாந்து கருத்து

148 Views

மனிதாபிமான அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தாய்லாந்தில் தங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து வர கோரிக்கை விடுத்துள்ளதை தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் அவருக்கு இல்லை எனவும், இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பதால் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்க அனுமதிப்பதில் பிரச்சினை இல்லையெனவும், தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக  கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்திற்கு செல்ல எதிர்பார்த்துள்ளதாக Reuters செய்தி வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply