மின்சாரக் கட்டணத்தின் நியாயமற்ற அதிகரிப்பு -அனைத்து தகவல் தொடர்பு சேவை,அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

134 Views

மின்சாரக் கட்டணத்தின் நியாயமற்ற அதிகரிப்பு காரணமாக, அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) போட்டோ பிரதி மற்றும் பிரிண்ட் அவுட் கட்டணங்களை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அண்மைக்கால மின்வெட்டுகளால் தமது தொழிலை முன்னெடுப்பதில் தாங்கள் நெருக்கடியான நிலையில் உள்ளதாக ACCOA தலைவர் இந்திரஜித் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இன்று முதல் மின்சார கட்டணத்தை பாரியளவில் 75% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் சம்பளம் மற்றும் வருமானத்தில் அதிகரிப்பு இல்லை, ஆனால் அவர்களின் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டுப் பொருட்களின் விலைகளை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று பெரேரா மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதே நேரம் மின்கட்டண அதிகரிப்புடன், பல வகையான உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்துவதில் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும் சீமெந்து, இரும்பு, கம்பிகள், கோழியிறைச்சி , முட்டை மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வர்த்தக அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

Leave a Reply