அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் நியமனம்

158 Views

Daisy Veerasingham 2020 696x416 1 அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் நியமனம்

அசோசியேட்டட் பிரஸ்(Associated press) நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த டெய்ஸி வீரசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அசோசியேட்டட் பிரஸ் (AP) ஊடக நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாட்டவரான டெய்சி வீரசிங்கம் (51) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 1, 2022 முதல் அவர் அந்த பொறுப்பை வகிக்கவுள்ளார்.

டெய்ஸி வீரசிங்கம் அசோசியேட்டட் பிரஸ் ஊடக நிறுவனத்தில் தற்போது நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக பதவி வகிக்கிறார்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைமுறை பிரித்தானிய குடியுரிமையை கொண்ட டெய்ஸி வீரசிங்கம், அசோசியேட்டட் பிரஸ்ஸை வழிநடத்தும் முதல் பெண் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply