36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மன்னார் மாரியம்மன் ஆலயத் திருவிழா

DSC 9241 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மன்னார் மாரியம்மன் ஆலயத் திருவிழா

36 ஆண்டுகளுக்குப் பின் மன்னார் நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவத் திருவிழா தடைப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு இறப்பு விகிதமும் அதிகரித்து காணப்படுவதால்  இந்த வருடம் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின்  மகோற்சவ திருவிழாவை பிற்போடுவது  என்று ஆலய நிர்வாகத்தினர் மற்றும்  உபயகாரர்கள் கூடி  முடிவை எடுத்துள்ளனர்.

நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பத்து நாட்களை கொண்ட வருடாந்த மகோற்சவமானது கொடியேற்றம், வசந்தோற்சவம், தேர்த்திருவிழா, வேட்டைத்திருவிழா, பொதுமக்கள் உபாயம்,கற்பூரத் திருவிழா, சப்பறத்திருவிழா, தீமிதிப்பு என்று பத்து நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், நாட்டின் பரவி வரும் கொரோனாத் தொற்றைக் கருத்தில் கொண்டு சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தின் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 மன்னார் நானாட்டான் பிரதேசததில்  அமைந்துள்ள நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலயம், மன்னார் மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய ஆலயமாகவும் பழமை மிகு ஆலயமாகவும் காணப்படுகின்றது. இந்த ஆலயம்  இலங்கையில் ஏற்பட்ட ஆடி கலவரம் காரணமாக 1985 ஆம் ஆண்டு ஆண்டு இதனுடைய மகோற்சவ திருவிழா முதல் முறையாக  தடைப்பட்டிருந்தது.

இலங்கையில் இனக்கலவரம் உச்சம் பெற்றிருந்த 1985ஆம் ஆண்டு தடைபட்டிருந்த இந்த ஆலயத்தின் மகோற்சவ திருவிழா 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தடைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-141-august-01-2021