கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் – பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா – மட்டு.நகரான்

வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் போதும், அவை தொடர்பில் எந்தளவுக்கு கவனம் செலுத்தப்படுகின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு மிகவும் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால் அது தொடர்பில் போதுமான கவனத்தினை யாரும் செலுத்துவதாகத் தெரியவில்லை.

கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே திட்டமிட்ட வகையில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக தமிழர்கள் மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தற்போதும் தமிழர்கள் முதலாவது நிலையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்ட வகையில் இனப் பரம்பலைக் குறைப்பதற்கான நீண்டகால திட்டமிடலுடன் கூடிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் 1990ஆம் ஆண்டுக்கு முன்னரே தமிழர்களின் இனப் பரம்பலைக் குறைப்பதற்கு சிங்கள தேசம் மிகவும் கச்சிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. குறிப்பாக கிழக்கில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு யுத்தத்தினை ஓருவகையில் பயன்படுத்திய தோடு, சகோதர முஸ்லிம் இனத்தையும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டது.

குறிப்பாக, தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைக்கும் செயற்பாட்டிற்கு முஸ்லிம்களில் உள்ள கடும் தீவிரவாதப் போக்குள்ளவர்கள் பக்க பலமாகவிருந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினரே கடந்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் தொடர்புபட்டவர்கள் என்ற கருத்துகளும் வெளி வந்ததைக் காண முடிந்தது.

Capture கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் - பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா - மட்டு.நகரான்

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 1995ஆம் ஆண்டிற்கு முன்பாக இனப் படுகொலைகள், தமிழர்களின் காணிகள் அபகரிப்பு, திட்டமிட்ட வகையில் மதமாற்றம் என்றவற்றினைக் கருவிகளாகப் பயன்படுத்தி பாரியளவில் கிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் வெற்றியும் பெற்றார்கள்.

இன்று பல தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் பெயருடன் வலம் வருகின்றன. இன்று கல்முனை தமிழ் பிரதேசத்திற்காகப் போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளர். கல்முனையைப் பொறுத்த வரையில், கல்முனையின் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் 80வீதத்திற்கும் அதிகமாக இருந்தும், கல்முனை நகரத்தினை ஆளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதற்கும் இந்த இனஅழிப்புச் செயற்பாடே காரணமாகும்.

இவ்வாறான செயற்பாடுகளைத் தமிழர்கள் தீர்க்க தரிசனமாகச் சிந்திக்கத் தவறியதே இன்று அம்பாறையும், திருகோணமலையும் தமிழர்களிடம் இருந்து பறி போவதற்குக் காரணமாக அமைந்தன.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் - பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா - மட்டு.நகரான்

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் - பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா - மட்டு.நகரான்

அதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தையும், தமிழர்களையும் பாதுகாக்கும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர். தமிழர்களுக்காக கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை உருவாக்கியவர்களே விடுதலைப் புலிகள் தான்.

தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட பல இனமாற்றச் செயற்பாடுகள் அன்று விடுதலைப் புலிகளின் தலையீட்டினால் இல்லாமல் செய்யப்பட்டன. தமிழர் பகுதிகளில் வர்த்தகர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் ஊடுருவி, தமிழர்களை இனமாற்றம் செய்வதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் களை எடுக்கப்பட்டனர். இன்று கிழக்கில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்கள் ஓரளவு வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகளே. ஆனால் தமிழர்களின் அரசியல் தலைமைகள் சரியான முன்னெடுப்புகளை மேற் கொள்ளாததே பல்வேறு இழப்புக்குக் காரணமாக அமைந்தது.

இன்று கிழக்கில் சிங்கள தேசத்திற்கும் முஸ்லிம் தேசியத்திற்கும் பாரிய சவாலாக வளர்ந்து நிற்பது மட்டக்களப்பு மாவட்டமாகும். கடந்த காலத்தில் பாரியளவில் தமிழர்களை கருவறுக்கும் பணிகள் திட்டமிட்டு மேற்கொண்டாலும், தமிழர்களின் விகிதாசாரம் என்பது ஓரளவு பேணப்பட்டே வந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வலுவான கட்டமைப்பு மட்டக்களப்பினை பாதுகாத்தது.

Capture.JPG 2 கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் - பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா - மட்டு.நகரான்

ஆனால் இன்று நிலைமை முற்று முழுதாக மாற்றம் பெற்றுள்ளது. யுத்த காலத்தில் சாதிக்க முடியாததை இன்று சர்வ சாதாரணமாகச் சாதிக்கும் நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கச்சிதமான முறையில் இனமாற்றம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் அதேவேளையில், தமிழர்களின் பிறப்பு வீதத்தினைக் குறைக்கும் செயற்பாடுகள் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் அரசியல் செயற்பாடுகள் என்பது உயர்ந்த வர்க்கத்தினரையும், வசதிகள் கொண்ட பிரதேசங்களையும் மட்டுமே இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, மிகவும் வறிய மக்களையும், அடிப்படை வசதிகளற்ற பகுதியையும் இலக்காக கொண்டு மதமாற்றமும், இனவிருத்தியை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப் படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அக்குரானை, மினுமினுத்தவெளி ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் நிவாரணம் வழங்குவதற்காக விஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதியிலிருந்து சுமார் 60கிலோ மீற்றர் தூரம் அந்தக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும், சுமார் 40கிலோமீற்றர் தூரம் காட்டுப் பாதையூடாகச் செல்ல வேண்டும். இடையில் முறுத்தானை என்னும் கிராமம் உள்ளது. அக்குரானை, மினுமினுத்தவெளி கிராமத்தில் 125தமிழ் குடும்பங்கள் உள்ளன. நாங்கள் நிவாரணம் வழங்கும் போது ஒரு வயதுக் குழந்தைகளின் கணக்கை கோரிய போது ஒரு வயது பிள்ளைகள்  05பேரே இருப்பது தெரிய வந்தது. குறித்த பகுதியின் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் இது தொடர்பில் கேட்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் எமக்குக் கிடைத்தன.

அதாவது அங்கு கடமையாற்றும் மருத்துவ தாதிகள், இங்கு குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தடுக்கும் வகையிலான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிய வந்தது. இதே போன்று சில அமைப்புகளும் இங்கு வந்து இப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பிலும், குழந்தைகள் பெற்றுக் கொள்வதினைத் தடுத்து நிறுத்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளையும், செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகத் தெரிய வருகின்றது.

இங்கு பெருமளவான முஸ்லிம் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் வந்து செல்லும் நிலை காணப்படுகின்றது. அவர்களே இங்கு அனைத்தையும் தீர்மானிக்கும் நிலை  இருந்து வருகின்றது. அங்கு பிள்ளைகளின் பிறப்பானது கடந்த 10வருடத்தில் மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது.

அங்குள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் இது தொடர்பில் தெரிவித்த போது, இங்கு குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்வதற்குச் சிலர் பெருமளவான பணத்தினை செலவிடுவதாகத் தெரிவித்தார். குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் பின்னணியில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதாகத் தெரிவித்தார்.

கடந்த 10வருடத்தில் மாணவர்களின் தொகை என்பது மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளதாகவும், சில வேளைகளில் இன்னும் சில வருடங்களில் குழந்தைகள் பிறப்பே இல்லாமல் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனத் தெரிவித்தார்.

Capture.JPG 1 கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் - பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா - மட்டு.நகரான்

இந்தச் செயற்பாடுகள் இங்கு மட்டுமல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப் படுகின்றன. இது தொடர்பில் நாங்கள் முன்பு குறிப்பிட்ட போதிலும், அது தொடர்பில் யாரும் கருத்தில் கொள்ளாத நிலையே இருந்து வருகின்றனர்.

மட்டக்களப்பிலிருந்து செயற்படும் இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம் என்னும் அமைப்பு தமிழர்களின் எல்லைப் பகுதியை இலக்கு வைத்து கடந்த 12வருடங்களாக செயற்பட்டு வருகின்றது. இதன் பணிப்பாளராக இருப்பவர் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவராவார். இவர் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் தீவிர ஆதரவாளராகவும் உள்ளதன் காரணமாக தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் இனக் குறைப்புக்குப் பிரதான காரணியாக இருந்து வருகின்றார்.

குறிப்பாக இந்த இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம், மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய மக்கள், பின்தங்கிய தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. இந்தச் சங்கம் தமிழ் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு மூளைச் சலவை செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்தச் சங்கம் ஊடாக ஒரு வாரத்திற்கு 50பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதுடன், மாதாந்தம் 200பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதாகவும் அந்ச்த சங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்தச் சங்கத்தின் ஊடாக குடும்பக் கட்டுப்பாடு செய்பவர்களில் 95வீதமானவர்கள் தமிழர்களாகவே இருக்கின்றனர். அதிலும் எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களே இலக்கு வைக்கப் படுகின்றனர்.

குறிப்பாக தமிழர் – முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளே அதிகளவில் இலக்கு வைக்கப்பட்டு, இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. தமிழர்களின் எல்லைப் பகுதிகளை பாதுகாக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் அது தொடர்பில் கண்டும் காணாத நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார், அதனை நான் இங்கு குறிப்பிடுவது சிறந்தது என்று கருதுகின்றேன். “அபிவிருத்தி என்பது பிரதேசத்துடன் மட்டும் தங்கியுள்ளது இல்லை. பிரதேச மக்கள் தொகையை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. பாடசாலைகளிலும் அபிவிருத்தி வளப்பங்கீடுகள் மாணவர் தொகையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பல தமிழ் பாடசாலைகளில் மாணவர்கள் சேரும் தொகை குறையுமானால், அப்பாடசாலைகள் மூடப்படக் கூடிய நிலமை ஏற்படும். தற்போது ஒரு சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த விடயத்தை அந்தந்த ஊர் மக்களும், பொது அமைப்புகளும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ஐந்து பிள்ளைகள் தேவை என்ற பிரச்சாரமும், அதற்கான பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் வட்டாரங்களை வகுக்கும் போதும் மக்கள் தொகை கருத்தில் கொள்ளப்பட்டதால், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தனித்துவமான கிராமங்கள் பக்கத்து கிராமங்களுடன் இணைக்கப் பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம். எனவே அபிவிருத்தித் தேவையை பெற்றுக் கொள்ளவும் மக்கள் தொகை கட்டாயம் தேவை” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழர்களின் எண்ணிக்கை தமிழர்களின் பல்வேறு செயற்பாடுகளில் தாக்கத்தினை செலுத்தக் கூடியது. இன்று தமிழர்கள் மத்தியில் காணப்படும் வறுமை நிலைமை காரணமாகவே அவர்கள் மத்தியில் அறியாமையும் ஒட்டி நிற்கின்றது. தமிழர்கள் மத்தியில் பிறப்பு வீதத்தினை அதிகரிப்பதற்கான எந்தத் திட்டங்களும் இல்லை. அதற்காக எந்த முயற்சியையும் யாரும் செய்யவில்லை.

மட்டக்களப்பு மாநகரசபையில் மூன்றாவது பிள்ளை பெறும் தமிழ் குடும்பத்திற்கு 5000ரூபா வழங்கும் திட்டமொன்று புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட போதிலும், அதனைப் புலம்பெயர் அமைப்புகள் தொடர்ந்து முன்கொண்டு செல்லாமையினால் இடையில் கைவிடப்பட்டது.

தற்போதுள்ள நிலையில் எல்லைக் கிராமங்கள் பலப்படுத்தப் பட்டு, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள், வருமானங்கள் உறுதிப்படுத்தப் படும் போது எதிர் காலத்தில் தமிழர்களின் பிறப்பு வீதத்தினைக் குறைக்கும் வேலைத் திட்டத்தினைத் தடுத்து நிறுத்த முடியும். குறைந்த பட்சம் தமிழர்களின் பிறப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தாவது நாங்கள் சிந்திக்க வேண்டிய காலத்தில் நிற்கின்றோம்.