இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த நாம் கோரவில்லை – இந்தியா

314 Views

இலங்கையின் வான்பரப்பில் மூன்றாவது நாடு ஒன்றின் வான்படையுடன் இணைந்து பயிற்சி ஒன்றை மேற்கொள்வதற்கு இந்தியா மேற்கொண்ட கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன, ஆனால் நாம் மூன்றாவது நாடு ஒன்றுடன் இணைந்து இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்தும் கோரிக்கையை இலங்கையிடம் விடுக்கவில்லை என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சீனாவின் பிரசன்னம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வரையிலும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா மெல்ல மெல்ல தனது பாதுகாப்பை இழந்து வருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் சீனாவையோ இந்தியாவையோ பகைக்காது நடந்துகொள்வதுடன், இரு நாடுகளுடனும் அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை கட்டியெழுப்புவதே இராஜதந்திரம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 136This week ilakku Weekly Epaper 136 June 27 2021 e1625120114464 இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த நாம் கோரவில்லை - இந்தியா

This week ilakku Weekly Epaper 136 June 27 2021 இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த நாம் கோரவில்லை - இந்தியா

Leave a Reply