ஊழல்வாதிகளை அடையாளங்காண தமிழக, இலங்கை அரசாங்கங்கள் முயற்சி: சி.வி.விக்னேஸ்வரன்

சாது மிரண்டால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும், அண்மையில் தமிழ்நாட்டு மக்களும் செயலில் காண்பித்துவிட்டனர். இலஞ்ச ஊழலில் இதுவரையில் ஈடுபட்டவர்களை நாம் அடையாளம்கண்டு தண்டிப்போம் என்று கூறியே தற்போதைய தமிழக அரசும், இலங்கை அரசாங்கமும் மக்களின் ஆதரவைப் பெற்றது.

இப்போது அன்று இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை இந்த அரசாங்கங்கள் அடையாளம்காண விளைந்தால், அவர்கள் பழிவாங்கலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறுகிறார்கள். இதனைப் பழிவாங்கல் என்று கூறினால், குற்றவாளிகளை காவல்துறையினர்   துரத்துவதும் பழிவாங்கலே என  தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் விஜய்யின் அரசும், இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசும் அரசியல் பழிவாங்கல்களில் இறங்கியிருப்பதாகவும், அதுபற்றிய நிலைப்பாட்டைக் கோரியும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.