காவல்துறையினர், இராணுவத்தினரின் இடையூறுக்கு மத்தியில் செஞ்சோலை சிறுவர் இல்ல படுகொலை நினைவேந்தல்

#செஞ்சோலை #sencholai

unnamed 4 1 காவல்துறையினர், இராணுவத்தினரின் இடையூறுக்கு மத்தியில் செஞ்சோலை சிறுவர் இல்ல படுகொலை நினைவேந்தல்

கடந்த 14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில், சிறீலங்கா வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 சிறுமிகள் மற்றும் 7 பணியாளர்களின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வீட்டின் முன் இன்று காலை இடம்பெற்றது.

 

அதே நேரம் இன்றுகாலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம், காவல் துறையினர், புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், வழமையாக நினைவேந்தல் இடம்பெறும் பகுதிக்கு படுகொலை செய்யப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பெற்றோர் சிலர் இராணுவம், காவல்துறையினரால்  விசாரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-141-august-01-2021