உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

219 Views

IMG 0107 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 62 பேரையும் எதிர்வரும் 19 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு​  நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்கள், இன்றைய தினம் பல்வேறு சிறைச் சாலைகளிலிருந்து மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

காத்தான்குடியை சேர்ந்த குறித்த 63 பேரும் கடந்த 2019ம் ஆண்டு  உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்திலும் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவின் படி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 10 மாதத்திற்கு பின்னர் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக பலத்து பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் 62 பேரையும் எதிர்வரும் 19 திகதி வரை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு​  நீதி மன்றம் உத்தரவிடப் பட்டுள்ளது.

IMG 0116 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சந்தேக நபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

அதே நேரம் இவ்வாறு தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களின் உறவினர்கள் அவர்களைச் சந்திப்பதற்காக நீண்ட நேரம் நீதி மன்றத்தின் வெளியே காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply