கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

IMG 5203 கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்தும் இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தன.

IMG 5199 கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து அரசடி சந்தி வரையில் கண்டன ஊர்வலம் நடைபெற்று மீண்டும் பேரணி, கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடம் வரையில்  சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கொத்தலாவலை பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

  IMG 5198 கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கல்வியை இராணுவ மயப்படுத்தும் கொத்தலாவலை சட்டத்தினை முறியடிப்போம், கொத்தலாவலை பாதுகாப்பு சட்ட மூலத்தினை அமுல்படுத்தாதே, கல்வியை இராணுவ மயப்படுத்தாதே, இராணுவ-சந்தை கல்வியை நிறுத்து போன்ற கோசங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

ilakku-weekly-epaper-140-july-25-2021