திருச்சி சிறப்பு முகாம் – தீர்வின்றித் தொடரும் இலங்கைத் தமிழர்களின் போராட்டம்

294 Views

தீர்வின்றித் தொடரும் இலங்கைத் தமிழர்களின் போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தீர்வின்றித் தொடரும் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து காத்திருப்பு நடைபெற்று வருகிறது.

“11.08.2021முதல் உண்ணாநிலை போராட்டமாக ஆரம்பித்து தற்கொலை முயற்சியில் என பலவற்றை கடந்தும் உயரதிகாரிகள்   ஒரு உறுதியான முடிவு எடுப்பதாக உறுதியளித்த நிலையில், அதற்கான பதில் வரும் வரை எமது காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

WhatsApp Image 2021 09 11 at 1.21.35 PM திருச்சி சிறப்பு முகாம் - தீர்வின்றித் தொடரும் இலங்கைத் தமிழர்களின் போராட்டம்

இதன் ஒரு பகுதியாக இருளில் ஒளி கிடைக்க நாம் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஒளியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதை அரசுக்கு தெரிவிக்கும் வண்ணமாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தோம்.

எமது கோரிக்கைகள் முழுமையாக அரசிடம் சென்று அடையாத நிலையில் தமிழக முதலமைச்சர் ஐயா மு க ஸ்டாலின் அவர்கள் எமது நியாயமான கோரிக்கைகளை நேரடியாக தன்னுடைய தனி குழு மூலம் கேட்டறிந்து எமது குறைகளை தீர்த்து வைக்குமாறு தாழ்மையாக எமது காத்திருப்பு போராட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்கின்றோம்” திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply