தலிபான், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைநகரில் போராட்டம்

432 Views

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைநகரில் போராட்டம்

ஆப்கன் அகதிகள் தலிபான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தலைநகரில் போராட்டம் நடத்தினர். நேற்று இந்தியத் தலைநகர் டெல்லியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, புதிய தலிபான்களின் ஆட்சிக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே தலிபான்களுக்கு எதிராக பிற நாடுகளில் வாழும் ஆப்கன் மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், டெல்லி ஜானக்கியாபுரம் காவல் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “தீவிரவாதமும், பாகிஸ்தானும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்”, “ஆப்கனிலிருந்து ஐஎஸ்ஐ வெளியேற வேண்டும்”, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களையும் எழுப்பினர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply