நோர்வே நாடாளுமன்ற உறுப்பினரானார் கம்சாயினி (கம்சி) குணரட்ணம்

514 Views

கம்சாயினி குணரட்ணம்

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் கடந்த திங்கட்கிழமை நோர்வேயில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

33 வயது நிரம்பிய கம்சாயினி மூன்று வயதில் இலங்கையிலிருந்து நோர்வே நாட்டுக்குக் குடிபெயர்ந்தார். 19 வயதில் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த கம்சி 27 வயதில் ஒஸ்லோவின் துணை மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். 2019 இல் அதே பதவிக்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

2011 ம் ஆண்டு ஊத்தோயா தீவில் பிரைவிக் என்ற இளைஞன் 69 இளையோரைச் சுட்டுக்கொன்ற போது 500 மீற்றர் தூரம் நீந்தி அச்சம்பவத்தில் உயிர் தப்பியிருந்தார்.

ஐரோப்பாவில் முதன் முதலாக ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்சாயினி, நோர்வேயில் திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சி சார்பாக இரண்டாம் நிலையில் தெரிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply