25 முக்கிய அரச நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நிறுவப்பட்ட தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இந்த நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 37 அரச நிறுவனங்களை இந்த பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இதுவரை 12 நிறுவனங்கள் மாத்திரமே இக்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் அடிப்படையில், எஞ்சியுள்ள 25 முக்கிய நிறுவனங்களையும் உடனடியாக இந்த தேசிய பாதுகாப்பு மையத்துடன் இணைப்பதற்கான பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பைப் பலப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.



