தந்தை செல்வா என அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் நேற்று (26) காலை இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, முதலில் சதுக்கத்தில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா – மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றது.
இதேவேளை, திருகோணமலையிலும் தந்தை செல்வாவின் நினைவு தினம் இன்று (26) உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.



