இலங்கையின் பிரபல மூத்த சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா காலமானார்

598 Views

21 6123a016e06a7 இலங்கையின் பிரபல மூத்த சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா காலமானார்

மூத்த சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி சங்கரி தவராசா  திடீர் உடல்நலக் குறைவால் இன்றையதினம்  கொழும்பில் காலமாகியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான  K.V. தவராசாவின் மனைவியான இவர், முக்கியமான வழக்குகளிலும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளில்   முன்னிலையாகியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவால்மிக்க பல வழக்குகள் தொடர்பில் இவர் ஆஜரானதுடன் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இவர் அறியப்படுகின்றார்.

இறுதியாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு சார்பாக வழக்கில் வாதாடி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலக்கு செய்தி நிறுவனம் தனது ஆழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply