திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

380 Views

இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழகம் -திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, சட்ட விரோத குடியேற்றம் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.

இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் எப்ஸிபன், கன்பூசியஸ், ரெஜிபன், ப்ரணவன், சவுந்தரராஜன் ஆகிய 10க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tamil News

Leave a Reply