உயிரை மாய்த்துக் கொள்வேன்: பிரித்தானியாவில் அகதி ஒருவரின் கண்ணீர்

296 Views

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் உயிரை மாய்த்துக்கொள்வேன் என அகதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சூடானில் இருந்து 6 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக வந்தவர் தற்போது ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்படுபவர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது குடும்பத்திற்கு உயில் மற்றும் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய கொள்கைக்கு எதிராக ஆர்வலர்கள் சட்டரீதியான சவால்களை முன்வைத்ததை அடுத்து போரிஸ் அரசாங்கம் குறித்த நடவடிக்கைகளை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Tamil News

Leave a Reply