தமிழ்நாடு: கரை ஒதுங்கிய இலங்கை படகு காவல்துறையினர் தீவிர விசாரணை

359 Views

கரை ஒதுங்கிய இலங்கை படகு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரையில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று  கரை ஒதுங்கியுள்ளது.

அந்த படகில் கழுகு உருவம் பொறித்த அடையாளம் உள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் இலங்கை தமிழர்கள் தமிழகத்தை நோக்கி கடல் மார்க்கமாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

அதேபோல் இந்த படகிலும் அகதிகள்  வந்தார்களா? அல்லது தங்க கடத்தல்காரர்கள் வந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. படகில் என்ஜின் இல்லாமல் இருப்பதால் படகில் வந்த கடத்தல்காரர்கள் என்ஜினுடன் தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. படகு கரை ஒதுங்கிய பிறகு மரைன் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் தாமதமாக வந்து விசாரணை நடத்தியதாக அந்த பகுதி மீனவர்கள் கூறியுள்ளனர்.

Tamil News

Leave a Reply