29 வயது தென் ஆப்பிரிக்க பெண் அவுஸ்திரேலியாவில் நிரந்தர வசிப்பதற்கான உரிமையைப் பெற ‘2068’ வரை காத்திருக்க வேண்டுமா?

அவுஸ்திரேலியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் Nicole எனும் தென் ஆப்பிரிக்க பெண் ‘அவுஸ்திரேலியா’வை தனது சொந்த நாடாகவே நினைத்து வருகிறார். ஆனால், சட்ட ரீதியாக அவர் 2068ம் ஆண்டு வரை ‘அவுஸ்திரேலியா’வை தனது நாடக சொல்ல முடியாது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, ஒரு இக்கட்டான சூழலில் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்காக ‘மீதமுள்ள உறவினர் விசா (Remaining Relative Visa)’ எனப்படும் நிரந்தர வசிப்பதற்கான உரிமையை வழங்கும் விசாவுக்கு Nicole விண்ணப்பத்திருக்கிறார்.

சொந்த நாட்டில் தனக்கு உறவினர் எவரும் இல்லாமல், நெருக்கமான உறவினர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் இருக்கும் பட்சத்தில் இந்த விசாவுக்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த விசா பரிசீலனைக்கான காத்திருப்புக் காலம் ‘50 ஆண்டுகள்’ என்பதால் நிச்சயத்தன்மையற்ற நிலையில் Nicole சிக்கியிருக்கிறார்.

முன்னதாக, அவர் கடந்த 2012ம் ஆண்டு வேலை விடுமுறை விசாவின் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு சென்று நர்சிங் கல்வி படிக்க தொடங்கியதும் மாணவர் விசாவுக்கு மாறியிருக்கிறார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கல்வியை தொடர முடியாத நிலையில் ‘மீதமுள்ள உறவினர் விசா’வுக்கு விண்ணப்பத்திருக்கிறார். அவரது விசா விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் உள்ளதால் இணைப்பு விசாவின் மூலம் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

Tamil News