ஆட்கடத்தல் குறித்து ஆலோசித்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய தரப்பு

அவுதிரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் தலைமையிலான குழு இலங்கைக்கு பார்வையிட்டுள்ள நிலையில், அக்குழு இலங்கை பாதுகாப்புச் செயலாலர் கமல் குணரத்ன தலைமையிலான குழுவை சந்தித்திருக்கிறது.

ஆட்கடத்தல் மற்றும் கடல்வழி அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட நாடுகடந்த குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக இரு நாட்டுத் தரப்பும் விவாதித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பல இலங்கையர்கள் அவுதிரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்று வருகின்றனர். இந்த சூழலில், அவுதிரேலியா- இலங்கை தரப்பினர் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Tamil News