உலக நாடுகளில் தாய்மொழியில் கல்வி வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது | நேர்காணல் | சண்முகம் இந்திரகுமார்

454 Views

சர்வதேச தாய்மொழி தினம்சண்முகம் இந்திரகுமார்

சர்வதேச தாய்மொழி தினம்

தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளரும், கல்வியியல் களம் சஞ்சிகை ஆசிரியருமான சண்முகம் இந்திரகுமார் அவர்கள், பன்னாட்டு தேசிய மொழி நாள் குறித்து இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

சர்வதேச தாய்மொழி தினம்
கேள்வி:

சர்வதேச தாய்மொழி தினம் வருடாந்தம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதன் முக்கியத்துவம் என்ன?

பதில்:
இதன்  முக்கியத்துவம்   மேற்கு பாகிஸ்தானில் தாய் மொழிக்கான கூறு ஒன்று ஆரம்பமாகி இருக்கிறது.

மேற்கு பாகிஸ்தான்  இந்தியாவில் இருந்து பிரிந்ததன் பின்னர் உருதுமொழி பாகிஸ்தானில் ஆட்சி மொழியாக இருந்தது.  1948ல் இருந்து அந்த முழு நாட்டுக்குமான ஆட்சி மொழியாக உருது அறிவிக்கப்பட்ட போது கிழக்கு பாகிஸ்தானுடைய, இப்ப (இருக்கிற பங்களாதேஷ்) பெரும்பாலான மக்களோட பங்களாதேஷ் மொழி பேசப்பட்டது என்பதனால், முழுக்க உறுதிமொழி அறிவிக்கப்பட்ட போது அந்த அறிவிப்பை பங்களாதேஷ் இளைஞர்களும், டாக்கா பல்கலைக்கழக மாணவர்களும், டாக்கா மருத்துவ கல்லூரி மாணவர்களும் சேர்ந்து 1952. 02. 21 ல் இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

அப்போது அங்கிருந்த  காவல்துறை, அந்த மாணவர்களை சுட்டுக் கொன்றது. அதிலே பல மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த நாளை நினைவு கூரும் வகையிலே பங்களாதேஷில் ஆண்டுதோறும் மொழி இயக்க நாளாக கொண்டாடப்பட்டது. நாளடைவிலே மொழிக்காக நடந்த போராட்டத்திலே கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டு தோறும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதியும் உலக தாய் மொழிகள் தினமாக கடைப் பிடிக்க வேண்டும் என்று அங்கிருந்து ராகுல் ரவிக்குல் இஸ்லாம் எனும் பங்களாதேஷ் அறிஞர்தான் 1998ல் முன்மொழிந்தார். அவரது கோரிக்கையை ஐக்கிய நாடுகள் ஸ்தாபன யுனெஸ்கோ பரிசீலித்து 1999 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இந்த தீர்மானத்தை அங்கீகரித்து, 2000 ம் ஆண்டிலிருந்து தாய்மொழிகள் தினம் பெப்ரவரி மாதம் 21 இலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அதற்கு பின்னர் மிக முக்கியமாக ஒரு சம்பவம் நடக்குது. பன்மொழிக் கல்வியின் வாயிலாக, நிலையான எதிர்காலத்தை நோக்கி என்ற வாசகத்தின் அடிப்படையில் நடப்பு ஆண்டு 2017 ஆம் ஆண்டு உலக தாய்மொழிகள் தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் யுனெஸ்கோ உறுதிப்படுத்தி அறிவித்திருந்தது.

இந்த நாளில் இருந்து ஒவ்வொரு மொழிக்குழுவினரும் தங்களது மொழியை கொண்டாடும் விதமாக இலக்கிய செழுமை குறித்த கருத்தரங்கினை நிகழ்த்துமாறு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கேட்டுக் கொண்டதோடு அந்த தினம் இன்று வரையும் கொண்டாடப்படுகின்றது.

இதில் முக்கியத்துவம் என்னவென்றால் காலத்துக்கு ஏற்ப ஒரு மொழி தன்னை புதுப்பித்துக், (பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றால் போல) கொண்டு இருந்தால் தான் – தன்னை தளம் அமைத்துக் கொண்டால் தான் அது ஒரு மொழியாக கருதப்படும்.

அவ்வாறு   தகமதிப்பு திறன் இல்லாது போனால் அது வழக்கொழிந்து போய்விடும். உதாரணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய  மொழிகளில் ஜேசு பயன்படுத்தியதாக கூறப்படும் அரமேய மொழி வழக்கில் இல்லை.

கடந்த நூறு ஆண்டுகளில் பெரும்பாலான மொழிகள் 7000த்தில்  இருந்து கிட்டத்தட்ட 3000 ஆக குறைந்திருக்கிறது. அந்த மொழி ஆய்வுகளும் அதனை கூறுகின்ற போது உலக மொழிகளிலே இருந்து செறிவான கலாசாரத்தைக் கொண்ட மொழிகளாக  ஆறு மொழிகள் வருகின்றன. அதற்குள்  எங்கள் தமிழ் மொழியும் உள்வாங்கப் பட்டிருக்கிறது. இதனால்  மொழிகள் அழிந்து போகாமல் இருப்பதற்காக ஐ.நா யுனெஸ்கோ எடுத்துள்ள முயற்சியினால் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகின்றது.

கேள்வி:
ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் இது ஏன் முக்கியமானதாக நோக்கப்பட வேண்டும்?

பதில்:
சர்வதேச தாய்மொழி தினம்இலங்கையை பொறுத்த அளவிலே ஈழத் தமிழர்களுக்கு  ஏன் தமிழ் மொழி முக்கியம் எனில், தமிழ் மொழி அரசகரும மொழியாக, பயன்பாட்டிலே இருக்கிறது என்று சொன்னாலும்,    வடக்கு கிழக்கு தவிர்ந்த  ஏனைய பிரதேசங்களில்  பெரும்பாலும் தாய்மொழி பேசப்படவில்லை.    அரசகரும மொழிகள் திணைக்களம் இருந்தாலும்கூட  அதில் தமிழ் மொழி உள்வாங்கல்கள் மிகக் குறைவு.

உலக நாடுகளில் தாய்மொழியில் கல்வி வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது.  பாலர் வகுப்பிலிருந்து உயர்தரம், பல்கலைக்கழகக் கல்வி வரையில், தாய் மொழி அதாவது தமிழ் மொழியிலே கல்வியை வழங்குகிற ஒரு நாடாக இலங்கை இருக்கின்றது.

அந்த அளவிலே முக்கியத்துவம் வழங்கும் நாடாக இலங்கை இருக்கின்றது.  அரச கரும மொழியாக பயன்பாட்டில்  இருக்கின்றபோது அது பல இடங்களிலே பின் தள்ளப்படுகின்றது.

அதற்கான ஆளுமைகள்  ஆளணியினர்  திணைக்களங்களிலும்  தமிழ் மொழி சார்ந்து அல்லது அதிகாரிகள் மிக குறைவாக இருக்கின்றனர். உதாரணமாக இலங்கையிலே கல்வி அமைச்சினை எடுத்துக் கொண்டால், 76 கல்வி அதிகாரிகளில் 2 தமிழ் மொழி பேசும் அதிகாரிகள் தான் உள்ளனர். மற்ற 74 பேரும் சிங்கள மொழியை சார்ந்தவர்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், அரசகரும மொழியாக இருக்கும்  நிலைமையிலே, இலங்கையில் தாய் மொழி பின்தள்ளப்படுகின்றது. ஆனால் தாய் மொழியில் 2 மொழியும் இலங்கையில் கற்பிக்கப்படுகின்றது என்பது முக்கியமானதாகும்.

சர்வதேச தாய்மொழி தினம்முக்கியமாக இலங்கையர்கள் என்றவகையில் ஈழத்தில் இருந்து பேசப்படுகின்ற மொழி யினுடைய பண்பாடு, கலாச்சாரம் அதாவது பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறும் போது, “தாய் மொழியினுடைய  தொன்மையிலும், பழமையிலும் இல்லை அதனுடைய இருப்பு, அதனுடைய வளர்ச்சியில் தான் இருக்கிறது.”  என்று.

அந்த அடிப்படையில் ஈழத்து தமிழர்கள் உலகெங்கிலும் இருக்கக் கூடிய மொழி சார்ந்து பேசுகின்றபோது எங்களுடைய மொழியிலே இருக்கக்கூடிய நாங்கள் பேசுகிற மொழியும், எழுதுகிற மொழியும் ஏனைய உலகத்திலே இருக்கிற ஏனைய தமிழர்களால் பேசப்படுகின்ற மொழியிலும் ஒரு மாற்றீடான, இலக்கண மொழிக்கு சமமான ஒரு மொழி, பேசப்படுவதாக மொழியியல் அறிஞர்கள் கூறுவதை பார்க்கிறோம். அந்த வகையிலே ஈழத்து தமிழ்  என்ற வகையிலும், தனித்துவமான பண்புகள் உண்டு. ஈழத்து மொழி, பேச்சிலும் அந்த  எழுத்திலும் ஒரு தனித்தன்மை இருப்பதனையும், தனிப் பண்பாட்டு மரபு இருப்பதனை கொண்டும். தமிழ் இனத்தவர்கள் என்ற ரீதியில் நாம் சிறப்பாக கருத வேண்டும்  என்று நினைக்கிறேன்.

கேள்வி:
இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரையில் புலம்பெயர்ந்த மக்கள் கணிசமாக உள்ளனர். தாய் மொழியை அவர்களால் தொடர்ந்தும் பேசக்கூடியதாக இருக்குமா?

பதில்:
சர்வதேச தாய்மொழி தினம்இலங்கை தமிழர்களை பொறுத்தவரையிலே பெருந் தொகையானவர்கள் பல்வேறு காரணங்களால் புலம் பெயர்ந்திருக்கின்றார் கள்.   இலங்கையில் பல்வேறு காரணங்க ளுக்காக இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள், புலம் பெயர்ந்த முதலாம் தலைமுறையினர் தங்களுடைய தாய் மொழியினை மறக்கவில்லை.  அது அவர்களுடனையே இருக்கின்றது. இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் அதற்குப் பின்னர் வருகின்ற அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்கின்ற, அந்த பிள்ளைகளுடைய மொழியில், தாய் மொழி எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்தும் என்பது ஒரு கேள்விக்குறி தான். இருப்பினும் சமகாலத்திலேயே நாங்கள் பார்க்கிறபோது சில நாடுகளில் கருத்தரங்குகள், செயலமர்வுகள், கலை விழாக்கள், தமிழ் பண்பாட்டோடு, நிகழ்த்தப்படுகின்ற பண்பாட்டு நிகழ்வுகளை பார்க்கின்ற போது ஒரு தெளிவான விடயம், தோன்றுகிறது.

எதிர்காலத்தில்,  அடுத்த தலைமுறைக்கும், இவர்கள் கடத்துவார்களா? கடத்தக் கூடும். ஒரு சில நாடுகளில், தனியார்  பாடசாலைகளாக, நோர்வே ஜேர்மனி, இங்கிலாந்து, கனடா  போன்ற நாடுகளில் தமிழ் பாடசாலைகள்  ஆரம்பித்திரு க்கிறார்கள். ஈழத்திலிருந்து பேராசிரியர்களான   சிவத்தம்பி   போன்றவர்கள் சென்று அங்கு பாடத்திட்டங்களையும்  உருவாக்கி   தமிழ் பாடநூல்கள் எழுதப்பட்டிருக்கிறது.

அண்மைக் காலமாக நாங்களும் அங்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எதிர்காலத்தில் தனித்துவமான  பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அங்கு  தமிழ் பாடசாலைகள் நடக்கின்றன. அங்கே இருக்கக்கூடிய, அரசியல் கட்சிகள் அல்லது அங்கே இருக்கக்கூடிய, பாடசாலைகளில், ஒரு பகுதியாக தமிழ்மொழி கொண்டு வரப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய தாய் மொழிமீதான பற்றுள்ளவர்கள்  பெரும்பாலானவர்கள். மொழி சார்ந்து, அவர்களுடைய கல்விசார்ந்து, பண்பாடு, அவர்களுடைய கலாச்சாரம் சார்ந்து, அவற்றிற்குள் வருவதற்கு  சிலவேளை விரும்பா விட்டாலும்  அல்லது தொழில் ரீதியாகசெயற்படா விட்டாலும்  அதனை மேம்படுத்தி செல்லா விட்டாலும்  அப்படியே அழிந்துவிடும் என்று கருதுவதற்கு இடமில்லை.  நிச்சயமாக இந்த முயற்சிகள் எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகத்திற்கு கணிசமான அளவு  பிள்ளைகளை, அடுத்த தலைமுறையினரை தமிழ்மொழிக்கு உள்வாங்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக கருதுகின்றேன்.

 

Tamil News

1 COMMENT

  1. […] சர்வதேச தாய்மொழி தினம்: தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளரும், கல்வியியல் களம் சஞ்சிகை ஆசிரியருமான சண்முகம் இந்திரகுமார் அவர்கள், பன்னாட்டு தேசிய மொழி நாள்மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-170-february-19/ https://www.ilakku.org/  […]

Leave a Reply