இலங்கை: ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 13 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் என்று  இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொடையாளர்களின் உதவி மட்டும் கிடைக்காவிடில் தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளின் உயிர் ஆபத்தில் இருந்திருக்கும் என்று கொழும்புவிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மருத்துவர் கூறியுள்ளார்.

தற்போது அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதில் “முற்றிலும் கொடையாளர்களின் நிதியுதவியை நம்பியே இந்த மருத்துவமனை இயங்குகிறது” என்றும் பல நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளதால் இன்னும் நிறைய கொடையாளர்கள் உதவ முன்வர வேண்டுமென்றும் அவர்  தெரிவித்துள்ளார்.