ஊடக சுதந்திர தர வரிசையில் இலங்கை146ஆவது இடத்தில்…

இலங்கை146 ஆவது இடத்தில்: உலக ஊடக சுதந்திர தர வரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 146ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகில் உள்ள 180 நாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நோர்வே முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாம் இடம் சுவீடனுக்கும் கிடைத்தது.
2021ஆம் ஆண்டில், உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 127ஆவது இடத்தில் இருந்தது. 2020 இல் 127ஆவது இடத்திலும் 2019 இல் 126ஆவது இடத்திலும் 2018 இல் 131ஆவது இடத்திலும் இருந்தது.

இந்த ஆண்டு, உலக ஊடகக் குறியீட்டில் இந்தியா 150ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 162ஆவது இடத்திலும், மியான்மர் 176ஆவது இடத்திலும் உள்ளன.

Tamil News