பாதுகாப்பு உடன்பாடுகளை அதிகரிக்குமாறு இலங்கை கோரிக்கை

334 Views

உடன்பாடுகளை அதிகரிக்குமாறு இலங்கை கோரிக்கை

பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை இந்தியாவுடன் அதிக நெருக்கமாக மேற்கொள்ள விரும்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு உடன்பாடுகளை அதிகரிக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொடவுக்கும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் சிறி ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் கடந்த மாதம் 30 ஆம் நாள் இடம்பெற்ற பேச்சுக்களின் போதே இலங்கை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளும், இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமோடர் துசாரா கருணாதுங்காவும் பங்குபற்றியிருந்தனர்.

700 இற்கு மேற்பட்ட இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சிகளை வழங்கி வருவதாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்தியாவின் எல்லா உதவிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், இந்தியா இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிக்க வேண்டும் எனவும் இலங்கைத் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளும் அதிக கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply