உக்ரேன் மீதான படை நடவடிக்கை பாரிய பின்விளைவுகளை ரஸ்யாவுக்கு ஏற்படுத்தும் என அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்டன் தெரிவித்துள்ளார்.
ரஸ்ய மற்றும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர்களுக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை (2) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிளிங்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடுத்தர தூரவீச்சுக் கொண்ட ஏவுகணைகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் அமெரிக்கா நிறுவியுள்ளது கவனத்தில் கொள்ளவேண்டியது என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஹி லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் எல்லையில் ரஸ்யா 90,000 படையினரை குவித்துள்ளது, அதேசமயம் 125,000 படையினரை உக்கிரேன் குவித்துள்ளது.
எனினும் உக்கிரேனைத் தாக்கும் நோக்கம் தமக்கில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. ரஸ்யா மீது பயங்கரவாதத் தாக்குதலை நடத்த முற்பட்ட உக்கிரேன் நாட்டை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.