கற்றலோனியா செயற்பாட்டளர்களை கண்காணிக்கும் ஸ்பெயின்

ஸ்பெயினின் மாநிலமான கற்றலோனியாவின் சுதந்திரம் தொடர்பில் செயற்பாடுகளை மேற்கொண்டுவருபவர்களின் கைத்தொலைபேசிகளை இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட உளவுபார்க்கும் சாதனங்கள் மூலம் ஸ்பெயின் அரசு கண்காணித்து வருவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கற்றலோனியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் றொஜர் ரொறென்ட் உட்பட பல சுதந்திர போராட்ட செயற்பாட்டளர்களை ஸ்பெயின் அரசு கண்காணித்து வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கற்றலோனியா செயற்பாடுகளை ஸ்பெயின் அரசு நீண்ட காலமாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக முன்னர் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுவிஸ் இல் உள்ள செயற்பாட்டாளர்களை கடந்த வருடம் ஸ்பெயின் கண்காணித்ததாக சுவிஸ் நாளேடான பிளிக் பத்திரிகை தெரிவித்திருந்தது.