சிறீலங்காவின் வரலாற்றில் செலவுமிக்க தேர்தல்

இந்த வாரம் சிறீலங்காவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலானது சிறீலங்காவின் வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களில் மிகவும் செலவுமிக்க தேர்தலாகும் என சிறீலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

10 பில்லியன் ரூபாய்களுக்குள் தேர்தல் செலவுகளை உள்ளடக்குவதற்கு தமது திணைக்கமும் அதிகாரிகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தேர்தல் ஆணையாளர் மகிந்தா தேசப்பிரியா தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவே அதிகளவான நிதி செலவாகி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply