இலங்கை – இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு; அமைச்சர் ரமேஷ் பத்திரண

171 Views

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினையை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, இராஜதந்திர ரீதியில் தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில், அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலே இலங்கை – இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அவர்  கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மீனவர் பிரச்னை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இந்திய அரசுடன் இலங்கை அரசு தொடர்ச்சியாகப் பேசி வருகின்றது. ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கை – இந்திய கடல் எல்லைகள் அடையாளமிடப்படாத ஒன்றாக இருப்பதால், இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ நுழைகின்றனர்.

எனினும், இந்த விடயத்தில் நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளைப் பாதுகாத்து, இராஜதந்திர ரீதியில் செயற்பட்டே தீர்வுகாண வேண்டும்” என்றார்

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad இலங்கை - இந்திய உறவுக்கு பாதிப்பின்றி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு; அமைச்சர் ரமேஷ் பத்திரண

Leave a Reply