இங்கு நடந்திருந்தால் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கும்- சிங்கள ஊடகம்

அமெரிக்காவில் உள்ள சட்டவாளரான கிரெக் டோசிரென்ட் மற்றும் கணிதத்துறை நிபுணர் ஜேசன் மில்லர் ஆகியோர் அமெரிக்கா காவல்துறையினர் மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பான 780 காணொளிகளை கடந்த 16 ஆம் நாள் வெளியிட்டிருந்தனர்.

விசாரணைகள் ஊடகவியலாளர் இணையத்தளமான Bellingcat அமெரிக்காவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா காவல்துறை மேற்கொண்ட 140 சம்பவங்களை பதிவேற்றியுள்ளது.

ஆனால் அமெரிக்காவுக்கு எதிராக யாரும் பேசவில்லை. இதேபோன்ற சம்பவம் சிறீலங்காவில் இடம்பெற்றிருந்தால் அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருக்கும், கொழும்பில் உள்ள அமெரிக்கா தூதுவர் அலைனா தெப்லிஸ் அறிக்கையும் விட்டிருப்பார்.

தற்போது அமெரிக்காவே உள்நாட்டுப் போரின் மத்தியில் நிற்கின்றது  சிறீலங்கா இல்லை என சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள ஊடகம் தனது பத்தியில் தெரிவித்துள்ளது.

Leave a Reply