மிலேனியம் நிதி தொடர்பில் அமெரிக்கா- சிறீலங்கா இடையில் மோதல்

290 Views

இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று (27) தெரிவித்துள்ளதாவது:

480 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த உடன்பாட்டின் நிதி இதுவரை சிறீலங்கா அரசுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் சிறீலங்கா அரசு அதனை அரசியல் விவகாரமாக்கி வருகின்றது. நாம் இந்த நிதியை 30 நாடுகளுக்கு 37 தடவைகளுக்கு மேல் வழங்கியிருக்கின்றோம்.

எனினும் இந்த நிதியை ஏற்பதும், மறுப்பதும் சிறீலங்காவை பொறுத்தது என அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த உடன்பாடு தொடர்பில் விசாரணைகளை மே;றகொள்வதற்காக சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா அமைத்துள்ள குழுவனது இரண்டு தடவைகள் தலா 7.4 மற்றும் 2.6 மில்லியன் டொலர்கள் நிதியை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவம் எனினும் அது வழங்கப்பட்ட கணக்கு இலக்கங்கள் தொடர்பில் தகவல் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவின் இந்த குழு தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்காவை சினமடையவைத்துள்ளது.

Leave a Reply