ரஷ்ய பல்கலைக்கழகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு- 8 பேர் பலியானதாக தகவல்

154 Views

துப்பாக்கிச் சூடு

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு  காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கி சுடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்த அறைகளை  மூடிக்கொண்டு பாதுகாப்பைத் தேடிக்கொண்டதாகவும் மற்றவர்கள் அறை ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் சந்தேக நபரை தாக்கி காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்  

இந்த சம்பவத்தில் குறைந்தது 19 பேர் காயம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply