இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகிறார் செந்தில் தொண்டமான்?

355 Views

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகிறார் செந்தில் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுள்ளார். தலைமைப் பதவிக்கு போட்டி எதுவும் நிலவாது எனவும் செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிர ஸின் தேசிய சபை இன்று கூடவுள்ளது. இதன்போது புதிய தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

தலைமைப் பதவிக்கு ஆரம்பத்தில் இருமுனைப் போட்டி நிலவிவந்தாலும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு வலுத்ததால், அப்பதவிக்கு போட்டியிடு வதில்லை என மற்றைய தரப்பு தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கூட்டமொன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது பதவிகளுக்கான உறுப் பினர் தேர்வு சம்பந்தமான பட்டியலில் இறுதிப்படுத்தப்பட்டது எனத் தெரியவந் துள்ளது.

Tamil News

Leave a Reply