அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை – இலங்கைக்கான ஆதரவை வெளியிட்டார்

105 Views

அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் எல் ஜெலென் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளதுடன் இலங்கைக்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான உரையாடலின் போது இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை நோக்கி முன்னெடுத்துள்ள திட்டங்கள் பொருளாதார சீர்திருத்தங்கள் உறுதியான மீட்சிக்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு கடன்வழங்கியவர்களை சமமாக வெளிப்படையாக கையாள்வது குறித்த இலங்கையின் அர்ப்பணிப்பையும் அமெரிக்க திறைசேரி செயலாளர் வரவேற்றுள்ளார்.

Leave a Reply