உக்ரைன் மீது ரஷ்யா திங்கள்கிழமை இரவு முழுவதும் நடத்திய தாக்குதலால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளும் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. ரஷ்ய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யத் தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ‘மிக மோசமான தாக்குதல்’ எனக் கண்டித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பெப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் இராணுவம் கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.



