தற்போதைய ஆட்சியாளர்கள் இனவாதத்தை முன்னெடுக்குமாறு பல இனவாத குழுக்களை தூண்டுகின்றனர் என குற்றம்சாட்டியுள்ள தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, மீண்டும் தலைதூக்கும் இனவாதத்தை மக்களால் மாத்திரம் தோற்கடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கொள்கைகள் மீண்டும் தலைதூக்குகின்றன என்றும் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பதற்கு பதில் அதற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சமூக ஊடகங்களில் வெளியாகும் சிறிய கருத்துக்களால் கூட அரசாங்கம் குழப்பமடைகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? – துரைசாமி நடராஜா
- தப்பிக்க வழி தேடும் இலங்கை அரசும், காப்பாற்ற காரணம் தேடும் தமிழர் தரப்பும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்