வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்

ஆளுநராக ஜீவன் தியாகராஜா

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார்.

ஜீவன் தியாகராஜா தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டிருந்த இவர், முன்னதாக 1984ஆம் ஆண்டு முதல் அரச சார்பற்ற அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.

மனித உரிமைகள் செயல்பாட்டாளரான இவர், மனிதாபிமான நிறுவனங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புதிய ஆளுநர் நியமனம் தொடர்பில் தனக்கு எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று தற்போதைய ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அறிவித்துள்ளார்.

அனால் எதிர்வரும் புதன்கிழமைக்குப் பின்னர் ஆளுநர் பதவியை ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்பார் என்று  தகவல் வெளியாகியுள்ளது.


ilakku-weekly-epaper-150-october-03-2021